பேராவூரணி, மே 15: சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணியின் சில பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி ,கழனிவாசல்,
குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம், பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூர், ஆத்தாளூர் ,பேராவூரணி சேது ரோடு, அண்ணாநகர், முனீஸ்வரர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
