ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலை ரூ.9,090 கொள்முதல்

ஜெயங்கொண்டம் மே.15: ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கடலை, எள் போன்றவை அதிகபட்ச விலையில் கொள்முதல் செய்யப்பட்டன. ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலை எள்ளு சோளம் பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயறு வகை பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இவற்றில் நேற்று 80 கிலோ கொண்ட கடலை மூட்டை ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.9,090 ம் குறைந்தபட்ச விலையாக ரூ.7,189க்கும் சராசரி விலையாக ரூ.8,659க்கும், 80 கிலோ கொண்ட எள்ளு மூட்டை ஒன்று ரூ.10,699 க்கு அதிகபட்ச விலையாகவும் குறைந்தபட்ச விலையாக ரூ.8,111க்கும் சராசரி விலையாக ரூ.9,810 க்கும் கொள்முதல் செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டன.

நேற்று கடலை 375 மூட்டைகளையும் எள்ளு 140 மூட்டைகளையும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மேலும் 80 கிலோ எடை கொண்ட ஒரு முந்திரி கொட்டை மூட்டை அதிகபட்ச விலையாக ரூ .7,689க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.6,411க்கும் நிர்ணயம் செய்யப்பட்டன.

 

Related Stories: