அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கக் கோரி மனு

திருப்பூர், மார்ச் 2: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கலெக்டர்அலுவலகத்தில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பல்வேறு கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் பிரதானக் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை இக்கூட்டத்திற்கு அழைக்கவில்லை. எனவே இனி வரும் இது தொடர்பான கூட்டங்களுக்கும் தங்கள் கட்சிகளையும் அழைக்க வேண்டும் என கூறி திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம், திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் மற்றும் மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர் கமல்ஜீவா ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories:

>