×

நாமக்கல்லில் தலைமைக்காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கல்

 

 

நாமக்கல், மே 15: தமிழ்நாடு காவல்துறையில் 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் இணைந்து, 2011 பேட்ச் காக்கி உதவும் கரங்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த தலைமைக்காவலர் சவுந்தர்ராஜன், கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரை இழந்து துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், 2011 பேட்ச் காக்கி உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் ரூ.25 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா நேற்று உயிரிழந்த காவலர் சவுந்தர்ராஜனின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

Tags : Namakkal ,Tamil Nadu Police ,Helping Hands ,Namakkal… ,
× RELATED விவசாயியின் டூவீலரை எரித்த வாலிபர் கைது