×

ராசிபுரம் அருகே போதையில் ரகளை பொக்ைலன் முன் டூவீலரை நிறுத்தி அடாவடி போக்குவரத்து பாதிப்பு

 

ராசிபுரம், மே 15: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் பட்டணத்திலிருந்து தனது டூவீலரில் ராசிபுரம் நோக்கி மது ேபாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற பொக்லைன் வாகனத்தை முந்த பிரதீப் ஹாரன் அடித்து கொண்டே சென்றார். ஆனால் பொக்ைலனை ஓட்டி சென்ற விஷய்சங்கர் வழி விடாததால் அதை முந்தி சென்று, பொக்லைன் முன்பு டூவீலரை நிறுத்தி பிரதீப் மறியலில் ஈடுபட முயன்றார். இதனால் அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒதுங்கி சென்றனர். அப்போது பிரதீப், நான் பல முறை ஹாரன் அடித்தும் வழிவிடாததால், என டூவீலரை குறுக்கே நிறுத்தினேன். இதை விஜய் வந்து பார்க்க வேண்டும் என்றார். இது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்ட ராசிபுரம் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று, இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Rasipuram ,Pokline ,Pradeep ,Rasipuram Pattanam ,Namakkal district ,Pattanam ,
× RELATED எருமப்பட்டி வட்டாரத்தில் குண்டுமல்லி...