×

பர்கூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

 

கிருஷ்ணகிரி, மே 15: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எஸ்ஐ பிரான்சிஸ் சேவியர் மற்றும் போலீசார் ஒப்பதாவடி கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் பணம் சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. அவர்களை போலிசர்ர சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் அத்திமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(57), கிருஷ்ணகிரி ராஜீ(58), அம்பலூர் சிலம்பரசன்(38), சின்னமூப்பனூர் மாணிக்கம் (63) மற்றும் சின்னகொத்தூர் சுந்தர்(57) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.9,200 பணம் கைப்பற்றப்பட்டது.

Tags : Bargur ,Krishnagiri ,SI Francis Xavier ,Oppadavadi Kootrodu ,Krishnagiri district ,
× RELATED காய்கறிகள் விலை 2 மடங்கு உயர்வு