×

வங்கி பணிக்கு தேர்வான மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து

 

காஞ்சிபுரம், மே 15: காஞ்சிபுரத்தில் வங்கி பணியில் இளநிலை எழுத்தராக தேர்வான மாணவிக்கு, கலெக்டர் தி.சினேகா நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்தினார்.
காஞ்சிபுரம் அடுத்து ஓரிக்கை பகுதியை சேர்ந்த மாணவி ஆர்.தனலட்சுமி (24). இவர், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று, வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அதன்படி, வங்கிப்பணியாளர் தேர்வாணையம் மூலம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு இளநிலை எழுத்தராக தேர்வான மாணவி ஆர்.தனலட்சுமிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் தி.சினேகா நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில், வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

Tags : Kanchipuram ,T. Sneha ,Orikai ,R. Thanalakshmi ,Kanchipuram District Employment Office… ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 25ம்...