சட்டமன்ற தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம்

கீழ்வேளூர், மார்ச் 2: நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறை அமல் குறித்த ஆலோசனை கூட்டம், தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலருமான ஜெயசித்ரகலா தலைமை வகித்தார். கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படை 6 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு குழு 8 மணி நேரம் என சுழற்சி முறையில் தொகுதி முழுவதும் பணியாற்ற செய்வது. நாகை மாவட்ட எல்லையான கானூர் சோதனைச்சாவடியில் 3 நிலை குழுக்கள் அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தலைமையிடத்து துணை தாசில்தார் துர்கா பாய், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் உமாகவுரி மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: