தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசி மக தெப்ப உற்சவம்

கரூர், மார்ச். 2: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் மாசிமகத் தேரோட்ட விழாவினை நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கரூர் தாந்தோணிமலையில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான நிகழ்ச்சி கடந்த மாதம் 17ம்தேதி வெள்ளி கருட வாகனத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 19ம்தேதி அன்று காலை 9மணியளவில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி பிப்ரவரி 25ம்தேதியும், தேரோட்டம் 27ம்தேதியும் நடைபெற்றது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று இரவு 7மணியளவில் நடைபெற்றது. கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், றற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

Related Stories:

>