காந்தல் பகுதியில் கால்வாய் கட்டுமான பணிகளை தி.மு.க.,வினர் ஆய்வு

ஊட்டி, மார்ச் 2:  காந்தல் பகுதியில் நடந்து வரும் கால்வாய் கட்டுமாண பணிகளை திமுக.,வினர் ஆய்வு செய்தனர். காந்தல் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயினால் மழை காலங்களில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து நீலகிரி எம்.பி. ராசா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கால்வாயை அகலப்படுத்தி, உயரப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் நந்தி ரவி, கார்டன் கிருஷ்ணன், ரவீந்திரன், ஸ்டேன்லி, காந்தள் பாபு லால், காந்தள் பாபு, சம்பத், ஆட்டோ பாபு, ராஜ் குமார், பாலமுருகன், தியாகு மகளிர் அணி, கீதா, லூயிசா, பிரியா, கண்ணகி, வாசுகி மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>