தோட்டக்கலைத்துறை விடுதி கட்டணம் உயர்வு

ஊட்டி, மார்ச் 2:  தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஓய்வு விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஓய்வு விடுதிகள் உள்ளன. இதுவரை இந்த விடுதிகளில் அரசு அலுவலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ஓய்வு விடுதிகளில் தங்க தோட்டக்கலைத்துறை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதன்படி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரசு அலுவலர்கள் தங்குவதற்கு ஒரு அறைக்கு ரூ.600ம், வெளியாட்கள் தங்குவதற்கு ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள விடுதியில் தங்க அரசு அலுவலர்களுக்கு ரூ.1000ம், வெளியாட்களுக்கு ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோஜா பூங்காவில் உள்ள டார்மென்டரியில் தங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>