தேர்தல் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

ஊட்டி, மாா்ச் 2: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தொடர்பாக புகார்களை பெறுவதற்காக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.   தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஒ., அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தலைமை கட்டுபாட்டு அறையை 0423-2441154 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இக்கட்டுபாட்டு மையத்தின் பொறுப்பு அலுவலராக பேரூராட்சிகள் உதவி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 7824058064 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம்.    இதுதவிர ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களை 0423-2445577 என்ற எண்ணிலும், கூடலூர் தொகுதிக்குட்பட்ட புகார்களை 0462-261295 என்ற எண்ணிலும், குன்னூர் தொகுதிக்குட்பட்ட புகார்களை 0423-2206002 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ேமலும் மாவட்ட கலெக்டர் 9444166000, மாவட்ட எஸ்பி., 9498107333, ஊட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் - 9445461804, குன்னூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் 9445000438, கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் 9445000437 என்ற எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>