கரூர் கலெக்டர் அலுவலகத்தில்

கரூர், மார்ச். 2: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை பெட்டியில் போட்டுச் சென்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாதம் 26ம்தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கள்கிழமை நாட்களில் நடைபெறும் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இதனையடுத்து, கோரிக்கை சம்பந்தமாக கலெக்டர் அலுவலகம் வந்த மக்கள், தங்களின் பிரச்னை குறித்தான மனுக்களை, நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரனோ ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களாக குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இரண்டு மாதம் வரை குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாது என்பதால் அதுவரை மக்கள் கோரிக்கை குறித்தான மனுக்களை பெட்டியில்தான் போட்டுச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: