தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் 91 பேர் கரூர் வருகை

கரூர், மார்ச். 2: கரூர் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக நேற்று 91 துணை ராணுவ படையினர் கரூர் வந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த மாதம் 26ம்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 12ம்தேதி முதல் வேட்புமனு தாக்கலும், ஏப்ரல் 6ம்தேதி வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறவுள்ள பல்வேறு பகுதிகளுக்கு முதற்கட்டமாக  துணை ராணுவ படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக உதவி கமிஷனர் தலைமையிலான 91பேர் துணை ராணுவ படையினர், சென்னையில் இருந்து ரயிலில் ஈரோடு வந்து, அங்கிருந்து காவல்துறை வாகனம் மூலம் கரூர் தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியில் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: