சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் அச்சடித்தால் சட்டப்படி நடவடிக்கை கடவூர் ஒன்றியத்தில் டெங்கு ஒழிப்பு 4 மாதமாக ஊதியம் இன்றி பணியாற்றும் களப்பணியாளர்கள்

தேர்தல் அலுவலர்  எச்சரிக்கை

கரூர், மார்ச். 2: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் உள்ள பெட்டியில் கடவூர் ஊராட்சி ஒன்றிய களப்பணியாளர்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடவூர் ஒன்றிய அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்புப் பணி களப்பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். இதுவரை எந்த மாதமும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த நான்கு மாதங்களுக்கான ஒரு மாத ஊதியம் கூட இன்னும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மிகுந்த சிரமப்படுகிறோம். கந்து வட்டிக்கு பணம் வாங்கி பிழைக்கும் நிலையில் உள்ளோம். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகியபோதும் நிதியில்லை என பதில் அளிக்கின்றனர்.மேலும், கடந்தாண்டே உயர்த்தி மாவட்ட கலெக்டரால் நிர்ணயம் செய்யப்பட்ட புதிய ஊதியம் ரூ.362ம் வழங்கப்படவில்லை. எனவே, இது குறித்து விசாரணை நடத்தி ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: