மந்த கதியில் வடிகால் பாலம் கட்டும் பணி சுற்றுச்சூழல் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு யாத்திரை கரூர் வருகை தேர்தல் விதிமுறை அமல் லாலாப்பேட்டை மேம்பாலத்தில் கட்சி விளம்பரம் அகற்றம்

குளித்தலை, மார்ச் 2: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் கட்சி விளம்பரங்களோ பெயர் பலகைகள் கொடிக்கம்பங்கள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என அறிவித்திருந்தன. அதன்படி கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படுவதும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படுவது பெயர் பலகைகள் மூடுவது ஆகிய பணிகளை வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் செய்து வருகின்றனர். இதனால் அனைத்துக் கட்சியினர் தானாக முன்வந்து தங்களது கொடிக்கம்பங்கள் அகற்றி கொண்டிருக்கின்றனர். அப்படி அகற்றாத பட்சத்தில் வருவாய் துறை, கிராம நிர்வாக அலுவலக பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் லாலாபேட்டை ரயில்வே மேம்பாலம் முழுவதும் கட்சி விளம்பரங்கள் எழுதப்பட்டதால் அவற்றை தேர்தல் விதிமுறைப்படி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சுண்ணாம்பு அடித்து அழித்து வருகின்றனர்.

Related Stories: