தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

கோவை, மார்ச் 2: கோவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கோவை மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. பகுதி செயலாளர் சேதுராமன் தலைமை தாங்கி, இனிப்பு வழங்கினார். விழாவில், ஆர்.எஸ்.புரம் பூபாலன், தேவசீலன், கோவை சம்பத், காட்டூர் வேலு, நாராயணன், டெம்போ சிவா, ராமமூர்த்தி, கதிரவன், பிரின்ஸ், குமரன் சுப்பிரமணி, தமிழ்செல்வன், குணசேகர், வீராசாமி, தண்டபாணி, ஆட்டோ சுரேஷ், தங்கவேல், குமார் உள்பட பலர் பங்கேற்றனர். கோவை மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கோவை ஒருங்கிணைந்த கோர்ட் நுழைவு வாயில் முன்புறம் நேற்று நடந்தது. முன்னாள் அரசு வக்கீல் மற்றும் கோவை வக்கீல்கள் சங்க தலைவர் பி.ஆர்.அருள்மொழி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், வக்கீல்கள், கே.எம்.தண்டபாணி, சிவக்குமார், அருள்குமார், சண்முகம், சவுந்தர்ராஜன், ராகல்பா, கணேசன், ரவிச்சந்திரன், தமிழ்செல்வி, சந்திரமோகன், ஜி.டி.ராஜேந்திரன், தர்மராஜ், ராஜமாணிக்கம், தங்கராஜ், தீபக்மது, செந்தில்குமார், விக்னேஷ், மோகன்பிரபு, எலிசபெத் ராணி, முருகானந்தம், மணிமேகலை, கோகிலா, மகேஸ்வரி, லலிதாபாய், ஏ.எம்.தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

கோவை 22வது வார்டு தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரத்தில் நேற்று நடந்தது. வார்டு பொறுப்பாளர்கள் ஆனந்த், ஜார்ஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மகுடபதி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், வக்கீல் சிவக்குமார், மோகன்குமார், அண்ணாதுைர, லல்லுபாய், அஸ்வின், கோபி ஆனந்த், ஸ்டாலின் ஜெயசீலன், பிரபாகரன், ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதிக்கழக தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா 23வது வார்டில் நடந்தது. பழக்கடை ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலரும், பகுதி செயலாளருமான கார்த்திக் செல்வராஜ் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், ஜெகதீசன், ஆறுச்சாமி, நாசர், ராஜன், அக்ரோ மயில்சாமி, அன்பரசு, அமான், நவீன், ரவி, சுலைமான், நவுசாத், கவுதம், பாலாஜி, பிரபாகரன், அருண், தீபா, பானு, மகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>