அண்ணா பதக்கம் பெற்ற எஸ்ஐக்கள் கமிஷனரை சந்தித்து வாழ்த்து

சேலம், மார்ச் 2: சேலம் மாநகரத்தில் நுண்ணறிவுப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய எஸ்ஐ சிவஞானம், வீராணம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்ஐ ரங்கராஜன் ஆகியோருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த விழாவில் அண்ணா பதக்கம் வழங்கப் பட்டது. மேலும் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, சான்றிதழ், மெடல் ஆகியவையும் வழங்கப்பட்டது. இதனை பெற்று வந்த இருவரும் கமிஷனர் சந்தோஷ்குமாரை  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories:

>