×

திருவையாறு அருகே காளியாட்டத்துடன் மதுர காளியம்மன் வீதியுலா

திருவையாறு, மே 14: திருவையாறு அருகே மனுநீதிப்பேட்டை மதுர காளியம்மன், சமயபுரத்தாள், மதுரை வீரன் கோயில் 32-ம் ஆண்டு காளியாட்டத்துடன் மதுர காளியம்மன் வீதியுலா நடை பெற்றது. திருவையாறு மனுநீதிப்பேட்டை மதுரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 11 ம் தேதி திருவையாறு காவிரிப்பாலம் தென்கரையிலிருந்து சக்தி கரகம் மகேஸ்வரி குழுவினர்கள் முன்னிலையில் புறப்பட்டு வீதி உலா வந்து கோயிலடைந்தது நேற்று முன்தினம் 12 ம் தேதி காலை கோயிலில் இருந்து மதுர காளியம்மன் காளியாட்டத்துடன் புறப்பட்டு சின்னக்கண்டியூர், கல்யாணபுரம் வழியாக கோயில் வளாகம் வந்தடைந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 15 காலை 8.00மணிக்கு திருவையாறு புஷ்ய மண்டபத் துறையிலிருந்து பால்குடம் புறப்பட்டு வீதவலம் வந்து பகல் 1.00 மணிக்கு மதுர காளியம்மனுக்கு பாலாபிஷேகமும், இரவு 8.00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், தீபாராதனையும். அம்மன் வீதி உலாக்காட்சியும் வரும் 17 மாலை 4 மணிக்கு திருத்தேர் வீதியுலா நடைபெறுகிறது.

 

Tags : Madura Kaliamman Street Parade with Kaliyattam ,Thiruvaiyaru ,Manu Neethipettai ,Madura ,Kaliamman ,Samayapurathal ,Madurai Veeran Temple ,Thiruvaiyaru Manu Neethipettai Madura Kaliamman Temple festival ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்