×

திருக்கருக்காவூர் சாந்த அய்யனார் கோயில் சித்திரை பால்குட திருவிழா

தஞ்சாவூர், மே 14: பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் சாந்த அய்யனார் கோயில் சித்திரை பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் புதுத் தெருவில் அமைந்துள்ள சாந்த அய்யனார், காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி வெட்டாறு ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர். தொடா்ந்து, சாந்த அய்யனார், காளியம்மனுக்கு பால் அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது. விழாவில் திருக்கருக்காவூர் புதுத்தெரு கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றம், மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசித்து வழிபட்டனர்.

 

 

Tags : Thirukarukkavur Shantha Ayyanar Temple Chithirai Paalkudam Festival ,Thanjavur ,Chithirai Paalkudam Festival ,Thirukarukkavur Shantha Ayyanar Temple ,Papanasam ,Paalkudam ,Kavadi ,Thirukarukkavur New Street ,Thanjavur district… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்