ஓமலூரில் 3 குழுவாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

ஓமலூர், மார்ச் 2: ஓமலூர் தொகுதியில் 3 பறக்கும் படையினர் வாகன சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பகலில்  வாகன சோதனையில் ஈடுபடாமல், இரவுநேரங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஓமலூர் தொகுதிக்குள் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய பணம் மற்றும் மதுபானங்கள் எடுத்து செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஓமலூர் நகரில் இருந்து வரும் வாகனங்களை மேச்சேரி பிரிவு சாலையில் வைத்து சோதனை செய்தனர். அதில், பணமோ, மது பாட்டில்களோ, பரிசு பொருட்களோ கிடைக்கவில்லை. இதனிடையே உரிய ஆவணங்கள் இன்றி ₹50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லப்படும் பணம், பொருட்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என்பதால், வணிகர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>