பரிசு பொருட்களுடன் கார் சிறைபிடிப்பு

கோவை, மார்ச் 2:  கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு 39வது வார்டு பீளமேடு மேம்பாலம் அருகே நேரு நகர் பகுதி உள்ளது. இங்கு பா.ஜ.வை சேர்ந்த ஒருவரது வீட்டில், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான காரில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படம் பொறித்த கவரில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையறிந்த அப்பகுதி தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அந்த காரை சிறைபிடித்து, வீட்டை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை அடுத்து தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.

Related Stories:

>