×

இருசக்கர வாகன பேரணி

இடைப்பாடி, மார்ச் 2:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நேற்று இடைப்பாடி நகர திமுக சார்பில் டூவீலர் பேரணி வீரப்பன்பாளையத்தில் நடந்தது. இடைப்பாடி நகர திமுக செயலாளர் பாஷா தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் மாதையன், வடிவேலு, சாமியப்பன், தங்கவேலு, சிங்காரவேலு, முபாரக், முன்னாள் கவுன்சிலர் ரவி, மற்றும் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். இதேபோல், பூலாம்பட்டி பேரூர் திமுக சார்பில் டூவீலர் பேரணி இடைப்பாடி திமுக ஒன்றிய செயலாளரும், செட்டிமாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவருமான நல்லதம்பி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, பூலாம்பட்டி பேரூர் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அழகுதுரை, குப்புசாமி, பூவாகவுண்டர்,  முத்தமிழ்ச் செல்வன், கரிகாலன், ஜெயவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொங்கணாபுரம் ஒன்றிய பேரூர் திமுக சார்பில், டூவீலர் பேரணி திமுக மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், பேரூர் செயலாளர் அர்த்தநாரீஸ்வரன் தலைமையில் நடந்தது.

Tags :
× RELATED கன்டெய்னர் லாரி மீது டூவீலர் மோதியது விபத்தில் தொழிலாளி பலி