×

எடப்பாடி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம்

 

 

காஞ்சிபுரம், மே 14: காஞ்சிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் உள்ள ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனைகளுக்கு பிறகு, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் பங்கேற்று, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், காஞ்சிபுரம் மாநகர செயலாளர் கே.யு.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Edappadi ,Kanchipuram ,AIADMK ,General Secretary ,Edappadi K. Palaniswami ,Chief Minister ,district secretary ,minister ,V. Somasundaram… ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 25ம்...