×

இடைப்பாடியில் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

இடைப்பாடி, மார்ச் 2:சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம், இடைப்பாடியில் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருப்பூர் கோட்ட செயலாளர் பழனிச்சாமி,  மாவட்ட செயலாளர் கோபிநாத், துணைத் தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் தேர்தல் சம்பந்தமாகவும், நிர்வாகிகள் சம்பந்தமான ஆலோசனைகள் நடந்தது. இடைப்பாடி நகர தலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.

Tags : Hindu Front General Committee ,
× RELATED குடியிருப்புகளுக்கே சென்று தடுப்பூசி சிறப்பு முகாம்