மேட்டுப்பாளையத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மண்டல அலுவலர்களுடன் ஆலோசனை

மேட்டுப்பாளையம்,மார்ச்2: சட்டமன்ற தேர்தலின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்தது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,95,802. இதில் ஆண்கள்1,43,198 பேர்.பெண்கள் 1,52,566 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர். மொத்த வாக்குச்சாவடிகள் 413. இதில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் கோவை மாவட்ட வழங்கல் அலுவலரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலரும் தாசில்தாருமான சாந்தாமணி உள்ளிட்ட மண்டல அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது, கூடுதல் வாக்குச் சாவடிகள், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: