சுண்ணாம்பு சுரங்கங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

சேலம், மார்ச் 2: சங்ககிரி பகுதியில் தனியார் சுண்ணாம்பு சுரங்கங்கள் குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். சங்ககிரி தாலுகா சின்னகவுண்டனூர் கிராமத்தில் அமைந்துள்ள மஹாலட்சுமி சுரங்கங்கள் மற்றும் பல்வெரைசர் (சுண்ணாம்பு சுரங்கம்), தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் உள்ள மோகன்குமார் (சுண்ணாம்பு சுரங்கம்) குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று (2ம் தேதி) காலை 11 மணி  மற்றும் மதியம் 12.30 மணிக்கு நடக்க இருந்தது. ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>