ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய போலீஸ்காரர்

கோவை, மார்ச் 2:  கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று, தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்காரருக்கு பாராட்டு குவிகிறது. உயிர் தப்பிய பயணியின் வீடியோ காட்சிகள் வைரலாக பரவுகிறது. கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. 3-வது நடைமேடையில் மெதுவாக சென்றபோது பயணி ஒருவர் ரயில் பெட்டியில் உடமைகளுடன் ஏற முயன்றார். அப்போது அவர், திடீரென நிலை தடுமாறி ரயில் பெட்டிக்கும், பிளாட்பார இடைவெளிக்கும் இடையில் தவறி விழுந்தார். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிச்சென்று அந்த பயணியை வெளியே இழுத்து காப்பாற்றினார். இப்படி, துணிச்சலுடன் காப்பாற்ற முன்வராவிட்டால் அந்த பயணி, பிளாட்பார சுவற்றுக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கி, உடல் சிைதந்து இறந்திருந்தார். பயணி தவறி விழுவதும், அடுத்த நொடியே போலீஸ்காரர் அவரை வெளியே இழுத்து காப்பாற்றுவதும் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பயணியின் உயிரை காப்பாற்றியவர் ரயில்வே போலீஸ்கார் ஸ்ரீஜித் என தெரியவந்தது. இவர், ஆர்.பி.எப். பிரிவை சேர்ந்தவர். உயிர்தப்பிய பயணி, தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்ெகாண்டதால், போலீசார் அவரது பெயர் விவரத்தை வெளியிடவில்லை.

போலீஸ்காரர் துணிச்சலாக செயல்பட்டு, பயணிைய காப்பாற்றிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: