இளைஞர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளிபாளையம், மார்ச் 2: பள்ளிபாளையம் அடுத்த ஐந்துபனை கிராமத்தில், மதுவிலக்கு போலீசார், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் சசிக்குமார், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் வெளியிடங்களில் விற்பனை செய்வது தெரிய வந்தால், இளைஞர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் மதுவிலக்கு போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories:

>