சுவர்களில் கட்சி சின்னங்கள் அழிப்பு

குமாரபாளையம், மார்ச்2: தேர்தல் அறிவிப்பையடுத்து குமாரபாளையம் நகராட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள், சின்னங்களை மறைக்கும் பணி துவங்கியுள்ளது. தமிழக சட்டபேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து குமாரபாளையம் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குமாரபாளையம் நகராட்சி பகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள், கட்சி சின்னங்களை மறைக்கும் பணிகளில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆணையாளர் ஸ்டான்லிபாபு மேற்பார்வையில் அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பெயர்கள் மீது பேப்பர்களை ஒட்டி மறைக்கும் பணிகளில் நகராட்சி பணியாளர்கள் அலுவலர்கள் துவக்கினர். நகராட்சி அலுவலகம், அரசு பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட அரசு இடங்களில் வைக்கப்பட்டுள்ள சாதனை விளக்கத்தட்டிகள், விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று துவங்கியது. தொடர்ந்து சுவர் விளம்பரம் அழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கொடி கம்பங்களை அந்தந்த கட்சி நிர்வாகிகள் அகற்றினர். அரசு சார்ந்த நலத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>