திருச்செங்கோடு வட்டாரத்தில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திருச்செங்கோடு, மார்ச் 2: திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலைக்கு நகர பொறுப்பாளர் தாண்டவன் கார்த்தி, ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன் ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர், பொதுக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பால், பழம் மற்றும் ரொட்டி வழங்கப்பட்டது. ஆன்றாபட்டியில் உள்ள ஏலிம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில், மதிய உணவு, இனிப்பு மற்றும் உடைகள் வழங்கப்பட்டன. அணிமூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டி ராஜவேலு, ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வன் ஆகியோர், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கு எழுது பொருட்களை வழங்கினர். குமரமங்கலத்தில், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில் வழங்கினார். மல்லசமுத்திரத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் பழனிவேலு, எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

மொளசியில் ஊராட்சி தலைவர் மீனாட்சி ராஜமாணிக்கம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜமாணிக்கம், ஆகியோர் இனிப்பு வழங்கினர். வரகூராம்பட்டியில் ஊராட்சி தலைவர் மணி, துணை தலைவர் மணிஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

Related Stories:

>