சேவல் சண்டை நடத்திய 3பேர் கைது

ஈரோடு, மார்ச் 2: ஈரோடு மாவட்டம் காகம் பாரப்பாளையம் ரோட்டில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிவகிரி போலீசார் அங்கு சென்று, சேவல் சண்டை நடத்தி வந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் காகம் எல்லப்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (26), வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்த மோகன் (21), மூலனூர் குறிஞ்சி நகரை சேர்ந்த ஈஸ்வரன் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3 சேவல்கள் மற்றும் ரூ.4,600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>