போச்சம்பள்ளி அருகே பாமக பேனர் கிழிப்பு

போச்சம்பள்ளி, மார்ச் 2: போச்சம்பள்ளி அருகே பாமக பேனர் கிழிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை, வன்னியர் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதற்காக நன்றி தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ராமதாஸ், அன்புமணி படத்தை பேனராக வைத்திருந்தனர். இதேபோல், போச்சம்பள்ளி அருகே நாகர்குட்டை என்னுடத்தில், வன்னியர் சங்கம் சார்பில் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மர்மநபர்கள் அந்த பேனரை கிழித்து எறிந்துள்ளனர். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், பேனர் கிழிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த தகலின்பேரில், அப்பகுதியில் நிர்வாகிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>