×

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொக்லைன் வாடகை அதிகரிப்பு

சூளகிரி, மார்ச் 2: சூளகிரியில் நடந்த பொக்லைன் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை  கூட்டத்திற்கு பொக்லைன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கோட்டப்பா தலைமை வகித்தார். கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் விலை உயர்வை தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்திற்கான ஒருமணி நேர வாடகை ₹1000, டிரைவர் படி ₹400ஆக உயர்த்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில், துணை தலைவர் சினிவாசன், நிர்வாகிகள் சந்திப்பா, ராமப்பா, மஞ்சு பிரதிப், தேவா, பாபு, சீனிவாசன், ராதாகிருஷ்ணன் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொக்லைன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Bokline ,
× RELATED கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் பறிமுதல்