முதியவர் மாயம்

கிருஷ்ணகிரி, மார்ச் 2: உத்தனப்பள்ளி அருகே வரகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(80). சவர தொழிலாளியான இவர், கடந்த மாதம் 25ம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றார். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் தியாகராஜன், உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

>