×

மத்தூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

போச்சம்பள்ளி, மார்ச் 2:  
மத்தூர் ஒன்றிய திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், மாவட்ட கவுன்சிலர் சங்கர், ஊராட்சி செயலாளர் கமலநாதன், மாவட்ட பிரதிநிதி குமார் முன்னிலை வகித்தனர், சேர்மேன் விஜயலட்சுமி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தோஷ், கதிர்வேல், கவுன்சிலர் நந்தினி கிருஷ்ணன், முன்னாள் தலைவர் ஜீவனாந்தன், பால்மூர்த்தி, அண்ணாமலை, ஆசீப், சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் குணா.வசந்தராசு இனிப்பு வழங்கினார்.

போச்சம்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் கேக் வெட்டினர். நிகழ்ச்சியில் கவுதம், இளையராஜா, செந்தில்நாயகம், சதீஸ், ஐயப்பன், மதிகுமரன், அர்ச்சுனன், சங்கர், ஆதிமூலம், லட்சுமணன், வேலன், கதிர், கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர். சந்தூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கவுன்சிலரும், இளைஞரணி அமைப்பாளருமான பழனி தலைமையில் கேக் வெட்டினர். நிகழ்ச்சியில் ஒன்றிய அமைப்பாளர்கள் காமராஜ், தெய்வம், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், முன்னாள் தலைவர் சக்ரவர்த்தி, குமரேசன், சுப்பிரமணி, பாலசுப்ரமணி, சீனி, பிரகாஷ், முல்லைவேந்தன், பெருமாள், மாது, தருமன், சண்முகம், சக்தி, மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : MK Stalin ,Mathur ,
× RELATED கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில்...