×

கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 2: கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது, எல்.ஐ.சி.,யின் பங்குகளை விற்பது, அரசு  இன்சூரன்ஸ் கம்பெனியை விற்பது ஆகிய முடிவுகளை எதிர்த்து நேற்று அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன் நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ஜெகந்நாதன் தலைமை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கி செயலாளர் பொன் மகாராஜா, தமிழ்மணி, இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் ஹரிராவ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் ஐயப்பன் நன்றி கூறினார். மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த 2 பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பதைக் கண்டித்தும், எல்.ஐ.சி.,யின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை  கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Tags : Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை