சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தர்மபுரியில் போலீசார் கொடி அணிவகுப்பு

தர்மபுரி, மார்ச் 2: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தர்மபுரியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் இடையே மோதலை தடுக்கவும், வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கும் துணை ராணுவம், ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், சட்ட ஒழுங்கு பிரிவு போலீசார், ஊர்க்காவல் படையினர் 400க்கும் மேற்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு தர்மபுரியில் நேற்று நடந்தது. தர்மபுரி வள்ளலார் திடலில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, நான்கு ரோடு, பெரியார் சிலை, எஸ்வி ரோடு, நகராட்சி வழியாக வந்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் முடிந்தது. கலெக்டர் கார்த்திகா, எஸ்பி பிரவேஸ்குமார் ஆகியோர் கொடியசைத்து, அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். தர்மபுரி சப் கலெக்டர் பிரதாப், டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: