தர்மபுரி மாவட்டத்தில் மது விற்பனை, கடத்தலை தடுக்க அதிகாரிகள் நியமனம்

தர்மபுரி, மார்ச் 2: தர்மபுரி மாவட்டத்தில், மதுபாட்டில்கள் விற்பனை, கடத்தல்களை தடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள போதும் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை, கடத்தல் நடக்கிறது. இதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மற்றும் மதுபானக்கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி டாஸ்மாக் உதவி மேலாளர் கருப்புசாமி, தர்மபுரி டாஸ்மாக் உதவி மேலாளர் (கணக்கு) பகவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கருப்புசாமி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருப்பார். பகவதி பறக்கும்படையில் இடம் பெற்றுள்ளார். இவர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பார். கருப்புசாமியின் செல்போன் எண்- 9443636745, பகவதியின் செல்போன் எண்- 9750498912 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மது பானம் விற்பனை, கடத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>