கன்னியாகுமரி, மே 13: கன்னியாகுமரி பெரியார் நகரை சேர்ந்தவர் ரோச் (63). அவரது மகள் சாலோம் ரோசிமா (19). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி சாலோம் ரோசிமா உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
