மார்த்தாண்டம், மே 13 : பளுகல் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் எழுந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பளுகல் வலியவிளைவீடு பகுதியை சேர்ந்த கிஷோர் மகன் மிதின் (26) என்பவர் நடத்தி வரும் சவுண்ட் சர்வீசில் அதிக ஒலி எழுப்பும் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மிதினை கைது செய்தனர்.
