உலர்களம் அமைத்து தர வலியுறுத்தல்

அரூர், மார்ச் 2: அரூரிலிருந்து தர்மபுரி, ஊத்தங்கரை, கடத்தூர், சேலம்,  மொரப்பூர்- கம்பைநல்லூர் பகுதியில் நெல், கேழ்வரகு, சாமை உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்யும் விவசாயிகள், அவற்றை தனியாக பிரித்து எடுக்கவும், உலர வைக்கவும் நெடுஞ்சாலைகளில் போட்டு வைக்கின்றனர். இதனால் சாலையில் வரும் இரு சக்கரம் மற்றும் நான்கு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பயிர்களை உலர வைப்பதற்கான களங்களை அதிகாரிகள் அமைத்து தந்தால், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>