அரூரில் 2000 பருத்தி மூட்டை ₹42 லட்சத்திற்கு ஏலம்

அரூர், மார்ச் 2: அரூர்  கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 2000 பருத்தி மூட்டை, ₹42 லட்சத்திற்கு ஏலம் போனது. அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பருத்தி  ஏலம் நேற்று நடந்தது. இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2000 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ₹6170 முதல் ₹8560 வரையும், வரலட்சுமி (டிசிஎச்) ரகம் ₹8280 முதல் ₹9850வரையும் ஏலம் போனது. இதில் மொத்தம் 2000 பருத்தி மூட்டை ₹42லட்சத்திற்கு ஏலம் போனது.

Related Stories:

>