புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தனது பயணத்தின் முதல் கட்டமாக வரும் 15ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை நேரில் சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து 15 முதல் 17ஆம் தேதி வரை நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 17ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரில் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனை சந்திக்கும் பிரதமர் மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவருடன் இணைந்து தொழில் துறை மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின் 18ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் நார்வே செல்லும் அவர், ஓஸ்லோவில் நடைபெறும் 3வது இந்தியா-நோர்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இறுதியாக 19ம் தேதி மற்றும் 20ம் தேதிகளில் இத்தாலி செல்லும் பிரதமர், அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்திக்கிறார்.
