- ஜெசிகா
- ரிபாகினா
- இகா
- இத்தாலியன் ஓபன் டென்
- ஸ்வெரெவ்
- ரோம்
- இத்தாலிய ஓபன்
- வீரகாந்தன்
- ஜெசிகா பெகுலா
- ஐக்கிய மாநிலங்கள்
- அனஸ்தேசியா
- பாட்போவா
- ஆஸ்திரியா
ரோம்: இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனை பங்கேற்று உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 5 வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஆஸ்திரியாவின் அனஸ்தசிய பொடபோவா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நம்பர் 8 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டனை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க வீராங்கனைகள் கோகோ காப்-இவா ஜோவிக் ஆகியோர் மோதினர். இதில் முதல் செட்டை 7-5 என்ற இவா ஜோவிக் கைப்பற்ற, அடுத்த 2 செட்களையும் 7-5, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், நம்பர் 2 வீராங்கனையான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த எலெனா ரைபாகினா, செக் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை 6-0, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். உலகின் 4ம் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் மோதினார். இதில் 6-2,6-1 என்ற கணக்கில் இகா ஸ்வியாடெக் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டி வீரரான ஆண்ட்ரியா பெல்லெக்ரினோ உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் நம்பவர் 2 வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலி வீரர் லூசியானோ டார்டெரியுடன் மோதினார். இதில் 1-6, 7-6, 6-0 என்ற கணக்கில் டார்டெரி வென்று ஸ்வெரேவ்வுக்கு அதிர்ச்சி கொடுத்து காலிறுதிக்கு முன்னேறினார்.
