×

அந்தரத்தில் தொங்கும் செல்போன் டவர்: பொதுமக்கள் அவதி

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.ஜி.புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கோயில், குடியிருப்புகள் உள்ளன. இவைகளுக்கு  இடையில் அனுமதியின்றி செல்போன் டவர் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்தன. அப்போது, பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கடந்த 2019ம் ஆண்டு  நவம்பர் மாதம்  போராட்டத்தில் ஈடுபட்டதால் அத்திட்டத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும், உடனடியாக கோபுரத்தில் பொறுத்தப்பட்ட  இரும்பு பொருட்கள் அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.

ஆனால், ஒராண்டுக்கு மேலாக  செல்போன் கோபுரம் அகற்றப்படாமல் உள்ளது. அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இரும்பு கம்பிகள் கீழே விழும் அபாயம்  இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் பீதியடைகின்றனர்.

இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், “ஒரு ஆண்டுக்கு மேலாக செல்போன் கோபுரம் பாதியில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு உடைந்து  விழும் அபாயம் இருக்கிறது.  இதனால், அவ்வழியாக செல்லவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி  அலுவலரிடம் பலமுறை புகார் கொடுத்தும் மெத்தனமாக செயல்படுகிறார்” என்றனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...