மின்கம்பத்தில் பைக் மோதி விவசாயி பலி

வேட்டவலம், மார்ச் 1: வேட்டவலம் அடுத்த இசுக்கழி காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் உத்ராபதி(63), விவசாயி. உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 26ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பைக்கில் சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் கிராமத்திற்கு திரும்பினார். தளவாய்குளம் மின்வாரிய அலுவலகம் அருகே வரும்போது, நிலைதடுமாறிய பைக் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்ராபதி மகன் தனஞ்செழியன்(33) வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>