60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி வட்டார மருத்துவ அலுவலர்கள் தகவல் கலசபாக்கம், செங்கம் வட்டத்தில்

கலசபாக்கம், மார்ச் 1: கலசபாக்கம், செங்கம் வட்டத்தில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு ஊசி போட உள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதாரத்துறை ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு தற்போது தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இணை நோய் உள்ளவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை தடுப்பூசி போடப்பட உள்ளது.

தடுப்பூசி போட வரும்போது ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை பொதுமக்கள் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் ₹250க்கு தடுப்பூசி போடப்படுகிறது. எனவே பொதுமக்கள் இலவசமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். செங்கம்: செங்கம் மேல்பள்ளிபட்டு அரசு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் கூறுகையில், மேல்பள்ளிபட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செங்கம் அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இணை நோய் உள்ளவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

Related Stories: