வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

முஷ்ணம், மார்ச் 1:  முஷ்ணம் வாணக்கார தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுரேஷ் (20). நேற்று முன்தினம் மாலை முஷ்ணம் திருப்பானாழ்வார் சாலையில் சென்று கொண்டிருந்ததார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாரதிதாசன் மகன் பிரசாந்த் (29), சுரேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சட்டைப்பையில் இருந்த ரூ.200 பறித்துச் சென்றார். இதுகுறித்து சுரேஷ் முஷ்ணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்- இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பது தெரியவந்தது.

Related Stories:

>