நெல்லிக்குப்பம் அருகே பெட்ரோல் ஊற்றி ஆட்டோ எரிப்பு

நெல்லிக்குப்பம், மார்ச் 1: நெல்லிக்குப்பம் அருகே எழுமேடு அகரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் என்பவரது மகன் விக்னேஷ்வரன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். நள்ளிரவு மர்ம ஆசாமிகள் சிலர் விக்னேஷ்வரன் வீட்டின் வெளி பக்க கதவை பூட்டிவிட்டு, வீட்டு வாசலில் நின்றிருந்த ஆட்டோ மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினர். இதையறிந்த விக்னேஷ்வரன், செல்பேசி மூலம் அருகில் உள்ளவர்களை தொடர்பு கொண்டார். அவர்கள் வந்து பூட்டை உடைத்து விக்னேஸ்வரனை மீட்டனர். பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் விக்னேஷ்வரன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>